
வாடிவாசல்
Vaadivasal
Auteur(s)
சி.சு. செல்லப்பா Ci.Su. Chellappa
சி.சு. செல்லப்பா Ci.Su. Chellappa
Editeur(s)
Kalachuvadu
Kalachuvadu
Date de parution :
01/12/2024
Expédié sous 48h
8.00 €
Livraison France à 4,50 € avec Mondial Relay !
Ean :
9788187477525
Partager :
Résumé
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளை யாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை. Jallikkattu, the bull fight of Tamilnadu, is the central theme of this highly interesting short fiction. சி.சு. செல்லப்பா சி.சு. செல்லப்பா (1912 - 1998) பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு சொந்த ஊர் சின்னமனூர். சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் செல்லப்பா பங்களித்திருக்கிறார். சந்திரோதயம், தினமணி இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். இவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ். மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேல் கொண்டுவந்தார். பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரளக் கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர். புகைப்படம் எடுப்பதில் செல்லப்பாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு. ஜல்லிக்கட்டுப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் படைப்பு என்று ‘வாடிவாச’லைக் குறிப்பிடலாம். Quelques mots en français Jallikkattu, le combat de taureaux au Tamil Nadu (à ne pas confondre avec la corrida, pas de mise à mort du taureau) est le thème central de cette nouvelle. Joliment illustré !