
Expédié sous 48h
9.00 €
Livraison France à 4,50 € avec Mondial Relay !
Ean :
9788189945947
Partager :
Résumé
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். Basheer’s much acclaimed love story. Well translated. வைக்கம் முகம்மது பஷீர் வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர். Quelques mots en français L'histoire d'amour la plus célèbre de Basheer, traduite en tamoul.